அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருது ஒன்றினை வழங்கிக் கௌரவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையில் நல்லதொரு நட்புறவு நீடித்து வருகின்றது. தற்பொழுது நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் படுதோல்வி அடைந்துள்ளார். அதனால், அங்கு ஜோ பிடன் தலைமையில், வருகின்ற 2021ம் ஆண்டு ஜனவரியில் புதிய அரசு அமைய உள்ளது. இந்த சூழலில், தன்னுடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருந்து வருகின்றார்.
அவர் தற்பொழுது தன்னுடைய நண்பர்களுக்கு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி வருகின்றார். அதில், அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவினை மேம்படுத்தியக் காரணத்திற்காக, பாரதப் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி உள்ளார். LEGION OF MERRIT என்ற அந்த விருதானது மிக உயரிய விருதாகப் பார்க்கப்படுகின்றது. இந்த விருதினை, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரெயன்னிடம் இருந்து, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் தரஞ்சீத் சிங் பெற்றுக் கொண்டார்.