ஏப்ரலுக்குள் மருந்து உருவாக்கப்படும்! டிரம்ப் நம்பிக்கை!

19 March 2020 அரசியல்
donaldtrumpcovid19.jpg

இந்திய நேரப்படி நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்புக் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸானது பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக, தற்பொழுது வரை 65 பேர் அமெரிக்காவில் பலியாகி இருக்கின்றனர். நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார். கனடா தன்னுடைய எல்லையை மூடியுள்ளது எனவும், அதனால் வர்த்தகப் பாதிப்பு எதுவும் பாதிக்கப்படாது எனவும் அவர் கூறினார்.

பொதுவாக, தடுப்பு மருந்து தயாரிக்க 12 முதல் 18 மாதங்கள் ஆகும் எனவும், ஆனால், நாம் இந்த வைரஸிற்கு தற்பொழுது மருந்து கண்டுபிடித்து பரிசோதித்து வருகின்றோம் எனவும், வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் மருந்து வெளியாகும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவியதால் தான், நான் சீனா வைரஸ் என்றுக் கூறினேனேத் தவிர, அவர்களை புண்படுத்துவதற்காக அல்ல எனவும், இது ஒரு தவறால் ஏற்பட்டது எனவும், இதற்காக யாரையும் நம்மால் குறிப்பிடவோ அல்லது குறைக் கூறவோ இயலாது எனவும் அவர் கூறினார்.

HOT NEWS