பங்கமாகும் டிரம்ப்! ஒரே ஒரு வைரஸ் மொத்த செல்வாக்கும் காலி!

20 May 2020 அரசியல்
donaldtrumptax.jpg

தொடர்ந்து அமெரிக்கா முழுவதும், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து வருகின்றது.

தற்பொழுது அமெரிக்காவில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 15,60,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து 2,97,000 பேர் மீண்டு உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸால் 93,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பலியாகி உள்ளனர். இதுவரை, எந்த நோயாலும், இவ்வளவு பேர், குறுகிய காலத்தில் அமெரிக்காவில் மரணமடைந்தது கிடையாது.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போதிலும், அமெரிக்காவில் தற்பொழுது ஊரடங்கானது தளர்த்தப்பட்டு உள்ளது. இதனால், அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கைத் திரும்பி உள்ளது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்புக் காரணமாக, பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

தற்பொழுது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு, இந்த கொரோனா வைரஸானது, மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. மெக்சிகோவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் தடுப்புச் சுவர் கட்டுவேன், அமெரிக்கா இழந்த வேலைகளை எல்லாம் மீண்டும் அமெரிக்காவிற்கே கொண்டு வருவேன் என, வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் ட்ரம்ப். உண்மையில் அவர் கூறியதை, அவர் நிறைவேற்றி விட்டார் என்று தான் கூற வேண்டும். மெக்சிகோவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே போல், அமெரிக்கா இழந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் பெற்று தந்துவிட்டார்.

இருப்பினும், அவரே எதிர்பார்க்காத மரண அடியினை, இந்த கொரோனா வைரஸ் வழங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து, அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம்பின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதனை சமாளிப்பதற்காக, சீனாவின் மீது குற்றம் சுமத்தி, அமெரிக்காவின் சுகாதாரம் பற்றிய கரையை மறைத்து வந்தார்.

நாளுக்கு நாள், அமெரிக்க மக்கள் மரணமடைந்து வருவதால், செய்தியாளர்கள் சந்திப்பில் உலர ஆரம்பித்தார். அமெரிக்க மக்கள் முன்னிலையில், தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்காக இந்தியாவிடம் உதவி கேட்டார். அவ்வாறு உதவவில்லை என்றால், அதற்கு ஏற்றாற் போல் பதிலளிக்கப்படும் என மிரட்டும் தொணியில் பேசினார்.

இந்தியாவும் தன் சார்பில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை நட்பின் அடிப்படையில் அனுப்பி வைத்தது. அதற்கு நன்றி தெரிவித்த டிரம்ப், இதற்கு பதிலுதவி செய்யப்படும் எனக் கூறினார். இந்த சூழ்நிலையில், உடலுக்குள் பூச்சிக் கொல்லி மருந்தினை செலுத்தி, அதனை இன்ப்ராரெட் மூலம் கொரோனாவை குணப்படுத்தும் யோசனையைக் கூறினார். இவருடைய இந்த அறிவிப்பால், அறிவியல் உலகமே அதிர்ந்தது.

பின்னர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தொடர்ந்து நான் எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், இதனைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இயலும் எனவும் கூறினார். இதற்கும், அமெரிக்க சுகாதார வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளால் பெரிய அளவில் பிரயோஜனம் இல்லை என, அமெரிக்காவின் சிடிசி கூறியுள்ளது.

இதுவும், டிரம்பின் செல்வாக்கினைக் குறைத்துள்ளது. தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களை, செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கொடுத்துக் கொண்டே இருப்பதால், அமெரிக்க மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இத்தனை நாட்களாக, அமைதியாக இருந்து வந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமவும் தற்பொழுது பொங்கி எழுந்துள்ளார்.

டிரம்பின் பழமைவாதமும், வெறுப்பு அரசியலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையும் தான், அமெரிக்க மக்களின் இப்படிப்பட்டக் குழப்பத்திற்கும், பிரச்சனைக்கும் காரணம் எனக் கூறியுள்ளார். இதனால், வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப்பிற்கு எதிராக வாக்கு சேகரிக்கப் போவதாக, அறிவித்துள்ளார்.

இதற்கு, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் ஆதரவு கிடைத்துள்ளது. இது, தற்பொழுது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு தலைவலியாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக, ஜோ பிடன் களத்தில் உள்ளார். இவருக்கு எதிராக, அமெரிக்க அதிபர் தன்னுடைய அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என டிரம்ப் மீது, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குற்றச்சாட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக டிரம்ப் தப்பித்துவிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து நீடித்தால், கண்டிப்பாக செப்டம்பரில் நடைபெறும் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

HOT NEWS