கை குலுக்குவது கிடையாது! இந்திய வணக்கம் தான் நன்மை! டிரம்ப் கலக்கல் பேச்சு!

13 March 2020 அரசியல்
donaldtrumphandshake.jpg

இந்தியர்களைப் போல வணங்கினால், எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு சமீபத்தில் வருகை தந்திருந்த டிரம்ப், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளார். தற்பொழுது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், யாரும் யாரையும் தொடாமல் இருப்பது நல்லது என, மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அயர்லாந்து நாட்டின் பிரதமரும் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்பொழுது, செய்தியாளர்களை அவர்கள் கூட்டாக சந்தித்தனர். அந்த சந்திப்பின் பொழுது பேசிய டிரம்ப், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, கைக் குலுக்கவில்லை.

மாறாக, இந்திய முறைப்படி, இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தோம். இது, அனைவருக்குமே நல்லது. கைக் கொடுக்கக் கூடாது என்ற நிலையில், நாம் என்ன செய்வது எனக் கேட்டுக் கொண்டோம். பிறகு, இந்திய பாரம்பரிய முறையான வணக்கம் தெரிவித்தலை பயன்படுத்தினோம் என மகிழ்வுடன் தெரிவித்தார். இது இணையத்தில், தற்பொழுது வைரலாகி வருகின்றது.

HOT NEWS