சீனாவுடன் பேச்சுவார்த்தையா? கடுப்பான டிரம்ப்! சுவாரஸ்யமான பதில்!

14 May 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

சீனா மீது தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், கொரோனா வைரஸைப் பரப்பியதாக சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றது.

அமெரிக்கா தான், உலகளவில் பரவி வருகின்ற கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 14 லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸால், பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,37,000 பேர் இந்த நோயில் இருந்து குணமாகி இருக்கின்றனர். 83,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் மரணமடைந்து உள்ளனர்.

இதனால், அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. என்ன செய்வதென்று தெரியாத அளவிற்கு, அமெரிக்க அரசாங்கம் விழிபிதுங்கி நிற்கின்றது. அந்நாட்டில் இந்த வைரஸால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனையொட்டி, தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப், சீனாவினைக் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

நேற்று அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், நீங்கள் சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே பேசி வந்த டொனால்ட் ட்ரம்ப், கடுப்பாக பேச ஆரம்பித்து விட்டார். கண்டிப்பாக இனி கிடையாது.

தற்பொழுது வரை, கொரோனா வைரஸ் பற்றி எவ்வித தெளிவானத் தகவலையும் சீன அரசாங்கம் நம்முடன் பகிர்ந்து கொள்ளவே இல்லை. இனி, சீனாவுடன் பேச்சுவார்த்தையேக் கிடையாது. அவர்கள், ஏற்கனவே செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தினை மீறமாட்டார்கள் என நம்புகின்றேன். ஒரு வேளை 200 பில்லியன் டாலர் அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்யத் தவறினால், அதன் பின்னர் சீனா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS