இந்தியா மருந்தினை அதிகளவில் வழங்க டிரம்ப் வேண்டுகோள்!

05 April 2020 அரசியல்
donaldtrumpcovid19.jpg

இந்திய அரசாங்கம், அமெரிக்காவிற்கு அதிக மருந்துகளை வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸால், அமெரிக்காவில் தான் தற்பொழுது அதிக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டின், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ளப் பல லட்சம் பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அங்குள்ள திரையறங்குகள், மால்கள், விளையாட்டு கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன. இருப்பினும், பொதுமக்கள் இந்த நோய் பற்றிக் கவலைப்படுவதாக தெரியவில்லை. தொடர்ந்து, மகிழ்ச்சியுடன் வெளியில் நடமாடுகின்றனர். அந்த அளவிற்கு, அவர்கள் மிகவும் ரிலாக்சாக உள்ளனர். அமெரிக்காவில் 3,11,616 பேர் இந்த நோய் தொற்று உள்ளவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர்.

இந்த நோய் தொற்றில் இருந்து, 14,943 பேர் குணமாகி இருக்கின்றனர். இருப்பினும், 8,489 பேர் இந்த நோயால் அமெரிக்காவில் மரணமடைந்துள்ளனர். அங்கு இந்த நோய் பரவ ஆரம்பித்து இரண்டு வாரத்திற்குள் பெருமளவில், பாதிப்பு உண்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து, விளக்கமளித்து வருகின்றார்.

அவர் நேற்று பேசுகையில், அமெரிக்காவில் அடுத்து வருகின்ற மாதங்களில் இந்த நோயால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கவலைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியா தங்களுக்கு மலேரியத் தடுப்பு மருந்தான, ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தினைத் தயாரித்து வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் என் நண்பர் மோடியுடன் போனில் உரையாடினேன் எனவும், அப்பொழுது அமெரிக்காவின் மருத்துவ வேண்டுகோளினை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் எனத் தெரிவித்ததாகவும் கூறினார். இந்தியாவில் பில்லியனிற்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் அதிகம். அதே போல், அமெரிக்காவிற்கும் தேவையான மருந்துகளைத் தயாரித்து வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார்.

இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள இந்த ஆர்டரானது, பல விதத்தில் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார். தானும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவருக்கு இரண்டு முறை, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS