வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் அதிபர் ட்ரம்ப்! செய்தியாளர்கள் சராமாரி கேள்வி!

06 October 2020 அரசியல்
donaldtrumpreturns.jpg

கொரோனா வைரஸிற்கு சிகிச்சைப் பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்பொழுது வெள்ளை மாளிகைக்கு திரும்பி உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மூன்றரைக் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த வைரஸால் உயிரிழந்து உள்ளனர். இந்த வைரஸால் உலகின் நம்பர் ஒன் வல்லரசான அமெரிக்கா தான், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அவருடைய மனைவி மெலானியா ட்ரம்பும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் கடந்த வாரம் அமெரிக்காவின் வாசிங்டன் டிசி மாகாணத்தில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவ முகாமில், சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்னும் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா வைரஸ் தொற்று குணமாகாத நிலையில், இன்று இந்திய நேரப்படி அதிகாலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அவர் திரும்பினார். அவருடைய பிரத்யேக ஹெலிகாப்டரில் அவர் வெள்ளை மாளிகையினை வந்தடைந்தார்.

இது குறித்து அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் சராமாரியாகக் கேள்வி எழுப்பினர். அப்பொழுது தன்னுடைய முகக் கவசத்தினைக் கழற்றிய டிரம்ப் கையை மட்டும் அசைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். தற்பொழுது அமெரிக்காவில் அதிபருக்கானத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரத்திற்காக டிரம்ப் இவ்வாறு செய்கின்றார் என, ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

HOT NEWS