4 வாரங்களில் கொரோனா மருந்து தயார்! டிரம்ப் அதிரடி பேச்சு!

20 September 2020 அரசியல்
donaldtrumpfun.jpg

இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களில், கொரோனா வைரஸிற்கு மருந்து தயாராகி விடும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இரண்டரைக் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல லட்சம் பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் முன்னணி நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இந்த வைரஸால் உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதற்கு சீக்கிரம் முடிவுக் கட்டப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றனர். தற்பொழுது விரைவில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த கொரோனா வைரஸால், டிரம்பின் செல்வாக்கு குறைய ஆரம்பித்துள்ளது. அதனை சரிகட்டுவதற்காக, தற்பொழுது புதிய அறிவிப்புகளை எல்லாம் கூறி வருகின்றார். இது குறித்து தற்பொழுது அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அவர் பேசுகையில், தன்னுடைய அரசு மிகத் தீவிரமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதுவே, முந்தைய அரசாக இருந்தால், கொரோனாவிற்கான மருந்து வர, பல ஆண்டுகள் ஆகும். இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில், கொரோனா மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்றுத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS