சீனாவின் லேப்பிலிருந்து வைரஸ் லீக்காகி இருக்கலாம்! டிரம்ப் அதிரடி!

17 April 2020 அரசியல்
donaldtrumpcovid19.jpg

சீனாவில் உள்ள, ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இந்த வைரஸானது, வௌவால்கள் மூலமாக பரவ ஆரம்பித்தன என, சீன விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வில் கண்டுபிடித்துக் கூறினர்.

இந்நிலையில், இந்த வைரஸால் உலகின் பல நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இதில், உலகின் வல்லரசான அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிறிய சந்தேகத்தினை முன் வைத்தார். சீனாவின் ஊஹான் பகுதியில் தான், உலகின் பெரிய வைரஸ் ஆராய்ச்சிக் கூடங்களுள் ஒன்று உள்ளது. அங்கிருந்து அந்த வைரஸ் லீக்காகி இருக்கலாம். அந்த ஆராய்ச்சிக் கூடத்திற்கு அருகில் தான், அந்த விலங்குகள் சந்தை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து, சீன அதிபருடன் உரையாடும் பொழுது பேசிக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறு இருப்பினும், விரைவில் இதன் உண்மைக் காரணத்தினை அமெரிக்கா கண்டறியும் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS