இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து நிச்சயம்! டிரம்ப் திட்டவட்டம்!

04 May 2020 அரசியல்
donaldtrumpvirus.jpg

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள், கொரோனா வைரஸிற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விடும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால், அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த வைரஸால் அங்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர்.

இதனால், அமெரிக்க அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் உள்ளது. எப்படியாவது, இந்த நோயினை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என, அமெரிக்கா பல திட்டங்களைத் தீட்டி வருகின்றது. ஆனால், பொதுமக்கள் இந்த ஊரடங்கினை எதிர்த்து, போராடி வருகின்றது. தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் மீது குற்றம் சாட்டி வருகின்றார். அவர் நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க மருந்து நிறுவனங்கள், கொரோனா வைரஸிற்கான மருந்தினைக் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். ஒரு வேளை, அமெரிக்காவிற்கு முன்னதாக, வேறு எந்த நாடாவது, இதற்கான மருந்தினைக் கண்டுபிடித்தால், கண்டிப்பாக நான் மகிழ்ச்சியே அடைவேன். அவர்களுக்கு, நான் தலை வணங்குகின்றேன்.

அமெரிக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், வருகின்ற செப்டம்பர் மாதம் படிக்கச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு, செல்வதைத் தான், நான் விரும்புகின்றேன். மனிதர்கள் மீது, பரிசோதனை செய்யப்படுவது ஆபத்தானதா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள், தாமாக முன்வருகின்ற ஆர்வலர்களே. அவர்களுக்கு என்னுடைய மரியாதைகளும், வாழ்த்துக்களும் என்று கூறியுள்ளார்.

HOT NEWS