நான் உள்ளவரை ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்காது! பாதிப்புகளே இல்லை!

09 January 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

நான் அதிபராக இருக்கும் வரை, ஈரானுக்கு ஒரு அணு ஆயுதமும் கிடைக்காது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் பேசுகையில், அமெரிக்க பாதுகாப்பு படைகளின் நிலைகள் மீது, ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலினால், இரண்டு நிலைகளுக்கு மட்டும் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், உயிர் சேதமோ அல்லது படுகாயம் போன்ற நிகழ்வுகளோ ஏற்படவில்லை.

ஆறு நாடுகளின் ஒப்பந்தத்தில் இருந்து, ஈரான் நாட்டினை அமெரிக்க நீக்கியுள்ளது. இதற்கு பிற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். சுலைமானி ஒன்றும் புனிதர் அல்ல. அவர் பல நாசவேலைகளைச் செய்தவர். ஆதலால் தான், அமெரிக்கா அவர் மீது தாக்குதல் நடத்தியது.

அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையானது, மேலும் அதிகரிக்கப்படுகின்றது. தற்பொழுதுள்ள சூழ்நிலையில், ஈரானின் கை தாழ்ந்துள்ளது. இதுவே, உலக அமைதிக்கும் நல்லது. ஈரான் ஒரு பயங்கரவாத நாடு. நவீன உலகின் அச்சுறுத்தலாக, ஈரான் உள்ளது. அதன் மீது இனி பலவிதமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் பேசியுள்ளார்.

HOT NEWS