மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்! ஜி7 அமைப்பில் சேர அழைப்பு!

03 June 2020 அரசியல்
modi-trump.jpg

நேற்று மாலையில் பாரதப் பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

சில வாரங்களாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லைப் பகுதியில் மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையில், சுமூகமான உறவு இல்லை. இரு நாட்டு வெளிநாட்டு தூதர்களும், இது குறித்துப் பேசி வருகின்றனர். சென்ற வாரம் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், தற்பொழுது நிலவும் இந்த எல்லைப் பிரச்சனையால், பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை எனக் கூறியுள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவினையும் ஜி7 அமைப்பில் சேர்க்க வேண்டும் என, ட்ரம்ப் கூறியுள்ளார். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் மோடியுடன் பேசுகையில் ஜி7 அமைப்பில் சேர்வதற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து டிவீட் செய்துள்ள மோடி, அமெரிக்க அதிபரும் என்னுடைய நண்பருமான டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஜி7 அமைப்பு குறித்தும், கொரோனா வைரஸ் குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.

HOT NEWS