நன்றி சொன்ன டொனால்ட் ட்ரம்ப்! மறக்கமாட்டேன் என்று நெகிழ்ச்சி!

09 April 2020 அரசியல்
donaldtrumphandshake.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளினை ஏற்று, இந்திய அரசாங்கம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையினை வழங்க முன் வந்துள்ளது.

கடந்த வாரம், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டொனால்ட் ட்ரம்ப், இந்த வைரஸால் இன்னும் லட்சம் பேர் மரணமடைய வாய்ப்பிருப்பதாக கவலைத் தெரிவித்தார். இதற்காக, மருந்துகளை அமெரிக்கா வாங்கி வருவதாகவும் கூறினார். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி என்னுடைய நல்ல நண்பர் எனவும், அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைத் தேவைப்படுவதாகவும், அதனை அவர்கள் (இந்தியா) வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

அவ்வாறு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. அதற்கானத் தக்கப் பதிலடி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கு, இந்திய கட்சிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். இந்திய அரசினை, அமெரிக்க அதிபர் மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினர். இந்நிலையில், உலகளவில் நிலவி வருகின்றப் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, அவசர உதவியாக மருந்தினை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவதாக மத்திய வெளியுறவுத் துறைக் கூறியது.

இதற்கு தற்பொழுது அமெரிக்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், இந்திய அரசாங்கம் மருந்து வழங்க முன்வந்துள்ளதற்கு நன்றி. இதனை மறக்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS