கிம் நலம் பெற வேண்டும்! டிரம்ப் பேச்சு!

22 April 2020 அரசியல்
trump-kim.jpg

வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், உடல்நலம் தேறி வர வேண்டும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தற்பொழுது இருதய அறுவை சிகிச்சைச் செய்து கொண்டார். அந்த அறுவை சிகிச்சையினைத் தொடர்ந்து, அவர் கவலைக்கிடமாக இருப்பதாக, செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், வடகொரியாவின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அதே போல், வட கொரிய செய்தி நிறுவனங்களும், இதனை மறுக்காமல் உள்ளன.

இதனால், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக, அனைத்து செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், வட கொரிய அதிபர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. இது எனக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகின்றன. அவர் எனக்கு நல்ல நண்பர்.

அவர் உடல்நலம் குணமாகி மீண்டு வர வேண்டும். அதிபர் கிம்மின் உடல்நலம் குறித்து, எவ்வித நேரடியானத் தகவல்களும் என்னிடம் வந்து சேரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

HOT NEWS