வேண்டுமென்றே சீனா பரப்பியிருந்தால்…! எச்சரிக்கும் டிரம்ப்! சீனா கதறல்!

19 April 2020 அரசியல்
trumpchina1.jpg

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், சீனாவைக் காட்டிலும் அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஊஹான் பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸால், சீனாவில் மொத்தமாக 4,632 பேர் மரணமடைந்து உள்ளனர். 82,735 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில், 77,062 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த வைரஸ் தற்பொழுது உலகம் முழுக்கப் பரவி வருகின்றது.

இருப்பினும், இந்த வைரஸால் அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் காரணமாக, 38,928 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 7,39,988 பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதிலிருந்து, 66,357 பேர் குணமாகி உள்ளனர்.

இதன் பாதிப்பு குறித்து, தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து நிலைமைய பொதுமக்களிடம் கூறி வருகின்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அவர் தற்பொழுது பேசுகையில், அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் இருந்து பரவி இருந்தாலும், இது பற்றி சீனா வெளிப்படையான தகவலை கூற மறுக்கின்றது. சீனாவின் ஊஹான் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து, இந்த வைரஸ் பரவி இருந்தால் கண்டிப்பாக சீனா அதற்கு காரணமாகவேப் பார்க்கப்படும்.

ஒருவேளை, அவ்வாறு நடந்திருந்தால் கண்டிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும். இந்த பிரச்சனைக் குறித்து, அமெரிக்கா விசாரித்து வருகின்றது. சீனாவில் உள்ள இறப்பு விகிதம் வெறும் 0.33% ஆக உள்ளது. அமெரிக்காவில் இது மிக அதிகமாகவே உள்ளது.

என்னிடம் நீங்கள் சீனா மீது கோபமாக இருக்கின்றீர்கள் என்றுக் கேட்டால், ஆம் நான் கோபமாகத் தான் இருக்கின்றேன். நான் ஆட்சிக்கு வரும் வரை மத்திய கிழக்குப் பகுதியினை ஈரான், கைப்பற்ற நினைத்தது. ஆனால், தற்பொழுது தன்னுடைய நாட்டினைக் காப்பாற்றப் போராடி வருகின்றது. சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகும் பொழுது, அனைத்தும் சரியாகத் தான் இருந்தது. ஆனால், அதற்குப் பிறகு இப்படி ஏற்பட்டு உள்ளதால், சீனா உடனான உறவுநிலை மோசமாகவே உள்ளது என்றுக் கூறினார்.

HOT NEWS