உங்கள் நாட்டு மக்களை அழைத்துக் கொள்ளுங்கள்! 10 மருந்துகள் சோதனை! டிரம்ப் அடாவடி!

11 April 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அழைக்காவிட்டால், கண்டிப்பாக அந்த நாட்டினரின் விசாவில் பலத் தடைகள் விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

உலகம் முழுக்க தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது கொரோனா வைரஸ். இதனால், உலக நாடுகள் பலவும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த நோய்க்கு எந்த மருந்தும் தற்பொழுது வரைக் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதனால், இந்த நோயால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 16 லட்சத்தினைத் தாண்டியுள்ளது.

இந்த வைரஸால், அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார், நான்கரை லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு பலி எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்பொழுது வரை, 5,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இந்த பலி எண்ணிக்கையானது, ஒரு லட்சத்தினைத் தாண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவேத் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினர்களை, அந்நாட்டு அரசாங்கங்கள் உடனடியாக அழைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அழைக்காத நாடுகளின் விசா மீது, தடை விதிக்கப்படும். பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். இது குறித்த அறிக்கையானது, தற்பொழுது ஹோம்லாண்ட் செயலாளரிடம் கொடுக்கப்பட உள்ளது. விரைவில், இது குறித்த நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அமெரிக்காவில் ஒரே நாளில், 32,000 பேருக்கு இந்த வைரஸானது பரவி உள்ளதாகவும் அவர் வேதனைத் தெரிவித்தார். வெளியில் நடமாடுபவர்கள், கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க தொழில்துறையானது, தாமாக முன்வந்துள்ளது எனவும், அதன் மூலம் தற்பொழுது இந்த கொரோனா வைரஸினைக் குணப்படுத்துவதற்காக 10 மருந்துகள் உருவாக்கப்பட்டு உள்ளன எனவும் தெரிவித்தார்.

எப்பொழுதும் 12 முதல் 18 மாதங்கள் ஆகும் எனவும், விரைவில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகளானது, பரிசோதனை முடிந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS