அதிபர் பதவியில் இருந்து விடைபெறும் டிரம்ப், தன்னுடைய மூட்டை முடிச்சுகளை கட்டி வருகின்றார்.
அமெரிக்காவின் முன்னாள் ரியல்எஸ்டேட் பிரபலமும், தற்போதைய அதிபருமான அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் வருகின்ற 20ம் தேதியுடன் முடிவிற்கு வருகின்றது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அவர் தோல்வியினை அடைந்தக் காரணத்தால், அவர் பதவியில் இருந்து வெளியேற உள்ளார். வருகின்ற 20ம் தேதி அன்று ஜோ பிடன் அதிபராக, பதவியேற்க உள்ளார்.
இதனை முன்னிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடையப் பொருட்கள் மற்றும் குடும்பத்தாரின் உடமைகளை, ப்ளோரிடாவில் உள்ள தன்னுடைய பீச் ஹவுஸிற்கு செல்ல உள்ளார். அங்கு உள்ள சூதாட்ட விடுதியில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அவர், புதன் கிழமை கிளம்புகின்றார். ஒரு சில அமெரிக்கப் பத்திரிக்கைகள் கூறுகையில், செவ்வாய் கிழமை விமானப் படை மைதானத்தில், டிரம்பிற்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும் எனவும், அன்றே அவர் இடம் பெயர்வார் எனவும் கூறப்படுகின்றது.
ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என, ஏற்கனவே கூறியுள்ள ட்ரம்ப், தன்னுடையப் பொருட்களை எல்லாம் தற்பொழுது புதிய வீட்டிற்கு மாற்றிக் கொண்டு இருக்கின்றார்.