அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உடல்நலக் குறைவால் காலமானார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். 71 வயதான அவர் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் காலமானார். இது குறித்து, தன்னுடைய இரங்கல் அறிக்கையினை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார்.
அதில், தன்னுடைய சகோதரன் மட்டுமல்ல, அவன் என்னுடைய நண்பனும் கூட. அவனை இழந்தது எனக்கு மிகப் பெரிய இழப்பு. அவன் தற்பொழுது என்னை விட்டு பிரிந்துள்ளான். விரைவில் நாங்கள் சந்திப்போம் என்று உருக்கமாக பதிவிட்டு உள்ளார். டிரம்பின் குடும்ப தொழிலினை நிர்வகித்து வந்த அவர், ஏற்கனவே உல்ப் ஸ்டிரீட்டில் பணிபுரிந்து வந்தார். உடல்நலம் பாதிப்பின் காரணமாக, மருத்துவமனையில் இருந்து வந்த அவர் மரணமடைந்து உள்ளார்.