ஏழு வகையான டீ! நான்கு வகையான ஜூஸ்! சைவ உணவு! தடாபுடல் விருந்து!

24 February 2020 அரசியல்
donaldmelaniavisit.jpg

நேற்று இரண்டு நாள் சுற்றுப் பயணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வந்தார். அவருடன் அவருடைய மனைவி மெலானியா டிரம்பும், மகள் இவாங்காவும் வருகை தந்திருந்தனர்.

அவர்கள், அஹமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர், அங்கிருந்து ஆக்ராவிற்கு சென்று, அங்குள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்றனர். அங்கு, அதிபர் டிரம்ப் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், அவருக்கு விருந்து பரிமாறப்பட்டது. அதில், ஏழு வகையான டீயும், நான்கு வகையான பழச்சாறும் பரிமாறப்பட்டன. அசைவப் பிரியரான டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பாரம்பரிய உணவுகளை உண்டுள்ளார். எப்பொழுதும், மாட்டிறைச்சியினை அவர் விரும்பி சாப்பிடுவார் எனவும், இந்திய மக்களின் உணர்வினைப் புண்படுத்தக் கூடாது என்பதால், இங்கு சைவ உணவுகளை எடுத்துக் கொண்டார் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்றிலும், சைவ உணவுகளே பரிமாறப்பட்டு உள்ளன. இவருக்கான உணவுகளை, பார்ட்டீயூன் லேண்ட்மார்க் ஓட்டலினைச் சேர்ந்த, சமையல் கலைஞர் சுரேஷ் கண்ணா தயாரித்துள்ளார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில், அவருக்கு முதல் உணவு வழங்கப்பட்டது. அதில், அசார்டட் கேன்ட் ஜூஸ் (ஆரஞ்சு மற்றும் கொய்யா), இளநீர் குடிப்பதற்கு வழங்கப்பட்டு உள்ளன.

அமெரிக்கன், இங்கிலீஷ், டார்ஜிலிங், அசாம், ஈயர்ல் க்ரே, க்ரீன் மற்றும் லெமன் டீ வழங்கப்பட்டு உள்ளன. ஹனீ பீ, ஏழு தானியக் கவலை, மற்றும் கோக்கோ-சிப் முதலியவை நொறுக்குத் தீனியாக வழங்கப்பட்டு உள்ளன. காமன் மற்றும் ப்ரோக்கோலி, கார்ன் பட்டன் சமோசா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளன.

அதே போல், பழ வகைகளாக, ஆப்பிள் பை, காஜூ கட்லி, எக்சோடிக் ப்ரஷ் கட் பழங்களும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு உள்ளது. அங்கும், அவருக்கு சைவ உணவுகளேப் பரிமாறப்பட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS