பள்ளிகளைத் திறங்கள் அல்லது உதவித்தொகை கட்! டிரம்ப் அடாவடி!

09 July 2020 அரசியல்
donaldtrumptax.jpg

அமெரிக்காவில் உள்ளப் பள்ளிகளைத் திறக்காவிட்டால், கண்டிப்பாக அமெரிக்க அரசின் பெடரில் உதவித் தொகையானது கட் செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் தான், கொரோனா வைரஸானது அதிகளவில் பரவி உள்ளது. அங்கு ஒரு லட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பதினைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸால், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தப் பாதிப்பால், அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அமெரிக்க சுகாதாரத்துறையானது பல வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றினை, சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்ளப் பள்ளிகள் அனைத்தும் வெகு சீக்கிரமாகத் திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது, ரத்து செய்யப்படும் என்றுக் கூறியுள்ளார்.

இதனிடையே, நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கையில், பல லட்சம் பெற்றோர் தற்பொழுது டிரம்பின் அறிவிப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகளில் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே, சுழற்சி முறையில், மாணவர்கள் பள்ளிகளுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாரம் மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும். மீதமுள்ள நாட்களில், ஆன்லைனில் பாடம் பயில வேண்டும் என்றுக் கூறியுள்ளனர்.

டிரம்பின் இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். குழந்தைகளுக்கு ஆபத்து என்றால், டிரம்ப் திருப்பித் தருவாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருகின்ற செப்டம்பர் மாதம் தேர்தல் வர உள்ள நிலையில், டிரம்பின் இத்தகைய முடிவுகள் அவருடைய செல்வாக்கினை அசைத்துவிடும் என்றுப் பல அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS