சீனா ப்ளேக் இனி வரவேக் கூடாது! டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்!

04 July 2020 அரசியல்
donaldtrumpfun.jpg

சீனாவில் இருந்து பரவியுள்ள ப்ளேக் நோயானது, என்றுமே நடக்கக் கூடாத ஒன்று. ஆனால், அதனை சீனா நடத்திக் காட்டி விட்டது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால், உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பத்து லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், தினமும் சராசரியாக 50,000க்கும் அதிகமானோரிடம் இந்த வைரஸானது கண்டறியப்பட்டு வருகின்றது.

இது அமெரிக்க அரசிற்கு, மிகப் பெரியத் தலைவலியாக அமைந்துள்ளது. இது குறித்து, தினமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளும் செய்தியாளர்களை சந்தித்து தகவல்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து அந்நாட்டு அரசு, சீனா மீது புகார்களை அடுக்கிய வண்ணம் உள்ளது. ஏற்கனவே, இரு நாட்டு அரசாங்கத்திற்கு இடையிலும், வர்த்தகப் போர் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் பிளேக் நோயானது பரவியிருக்கக் கூடாத ஒன்று. ஆனால், அதனை சீனா வெற்றிகரமாகப் பரப்பி விட்டது. அமெரிக்காவும், சீனாவும் தற்பொழுது தான், புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த பேனாவின் மை கூடக் காயவில்லை. அதற்குள் சீனா தன் வேலையைக் காட்டிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

HOT NEWS