உலக அழிவினைக் காட்டும் கடிகாரத்தின் நேரமானது, 100 நொடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது.
1947ம் ஆண்டு, இந்த உலக அழிவினைக் காட்டும் கடிகாரமானது அறிமுகப்படுத்தப்பட்டது. மனிதர்களின் பிரதான எதிரியாக, அணுக் கழிவுகளும், அணு குண்டுகளும் இருப்பதாக இந்தக் கடிகாரத்தினை வடிவமைத்தவர்கள் கருதினர். இதனைக் கருத்தில் கொண்டு, புல்லட்இன் என்ற அணு விஞ்ஞானிகள் குழுவானது, ஒரு கடிகாரத்தினை உருவாக்கியது. அதில், உலக எப்பொழுது அழியும் எனக் குறிக்கும் நேரமானது தயாரிக்கப்பட்டது.
முதன் முதலாக 1953ம் ஆண்டு, அமெரிக்காவும், ரஷ்யாவும் ஹைட்ரஜன் குண்டு வைத்திருப்பதை ஏற்றுக் கொண்டன. இதனையடுத்து, உலக அழிவு ஆரம்பமானது என, அந்தக் கடிகாரம் முன்னோக்கி நகர்த்தப்பட்டது. அப்பொழுது தொடங்கி இப்பொழுது வரை, இந்தக் கடிகாரம் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கடிகாரம் முன்னோக்கி நகர்ந்து தற்பொழுது இறுதி அத்யாயத்தினை எட்டியுள்ளது.
உலக அளவில் பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வெப்பநிலை அதிகரிப்பு, பனிக்கட்டிகள் உருகுதல், திடீரென்று ஏற்படும் காட்டு தீ பிரச்சனை போன்றவைகளால், மனித இனம் தன்னுடைய இறுதி கட்டத்தினை நெருங்கி வருவதாக, போரிஸ் என்ற விஞ்ஞானி கவலைத் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இந்த கடிகாரத்தின் நேரமானது, கூடுதலாக 100 வினாடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டது. இந்தக் கடிகாரத்தில் இருந்த நான்கு கட்டங்களில், தற்பொழுது நான்காவது கட்டத்தின் இறுதியினை அந்தக் கடிகாரத்தின் முட்கள் நெருங்கியுள்ளது. இதனால், உலகம் விரைவில் அழியும் என கூறாமல் கூறப்பட்டுள்ளது.