கொரோனா வைரஸைக் கண்டறிந்த மருத்துவர் காணவில்லை! சீனா உண்மையை மறைக்கின்றது?

05 April 2020 அரசியல்
draifen.jpg

உலகம் முழுவதும், தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70,000 பேர் அதிகாரப்பூர்வமாக மரணமடைந்து உள்ளனர். 2,56,000 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து இந்த வைரஸானது பரவ ஆரம்பித்தது.

இந்த வைரஸால் சீனா தான் முதலில் பாதிக்கப்பட்டது என்றாலும், தற்பொழுது சீனா கிட்டத்தட்ட பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக, இது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த வைரஸ் பற்றிய உண்மையைக் கூறிய மருத்துவரைத் தற்பொழுது காணவில்லை. ஆய் பென் என்ற மருத்துவர் ஊஹான் பகுதியில் அமைந்துள்ள, மத்திய மருத்துவமனையில், மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

அவர், கடந்த டிசம்பர் மாதம் நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்துள்ளார். அந்த நோயாளிக்கு விசித்திரமான நோய் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அவருடைய இரத்த மாதிரியினை எடுத்து, பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு சார்ஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடித்துள்ளார். அந்த விஷயத்தினை தன்னுடன் பணிபுரிந்த சக மருத்துவரான, லீ வெய்டாங்குடன் பகிர்ந்துள்ளார்.

இதனை, லீ வெய்டாங்கும் முதலில் கூறினார். ஆனால், அவர் தற்பொழுது உயிருடன் இல்லை. இந்த நோய் தொற்றால், அவர் மரணமடைந்து உள்ளார். இந்த வைரஸ் பற்றி தன்னுடைய நண்பர்களிடம், ஆய் பென் விவரம் கேட்டுள்ளார். அதற்கு, அவர்களும், சீனாவின் தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில், மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

மேலும் பல மருத்துவர்கள் இதனைக் கூறினார்கள். ஆனால், அவர்களை மிரட்டிய கம்யூனிச அரசான சீனா, அவர்களிடம் இருந்து மிரட்டி கையெழுத்தினை வாங்கியுள்ளது. அவர்கள் கூறுவதெல்லாம் பொய் எனக் கூறி, அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து விட்டனர்.

என்னைப் பொறுத்த வரையில், இந்த நோயானாது நவம்பர் மாதமே பரவத் தொடங்க ஆரம்பித்து இருக்க வேண்டும். தற்பொழுது சீன அரசாங்கமானது, மிகவும் குறைவான அளவிலேயே மரணம் பற்றிய அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றது. உண்மையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தவர்கள் எப்படியும் 10 மடங்கு அதிகமாகவே இருப்பர். அதே போல், சிகிச்சையே பெறாமல் இருந்தவர்களையும் கணக்கில் சேர்த்தால், எப்படியும் 40 மடங்காக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆய் பென்னின் இந்த பேட்டியானது, சீனாவில் உள்ள அனைத்து மீடியாக்களிலிருந்தும் விரைவாக நீக்கப்பட்டது. இது பற்றிய செய்தியானது, முழுவதுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருப்பினும், இந்த செய்தியினைப் பார்த்தப் பலரும், சீன அரசாங்கத்தால் கண்டுபிடிக்க இயலாத வகையில், இரகசியக் குறியீடுகள், ஈமோஜிக்கள், கிளிங்கான் போன்ற இரகசிய மொழியினைப் பயன்படுத்தியும் இந்த பேட்டியினை உலகம் முழுக்கப் பரப்பி உள்ளனர்.

குறிப்பாக, சீன மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும், வீ சாட் செயலி மூலம் பரப்பி உள்ளனர். இவ்வளவு பெரிய உண்மையைக் கூறிய ஆய் பென், தற்பொழுது காணவில்லை. அவரை யாராவது கடத்திவிட்டார்களா அல்லது உயிருக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டாரா என்பது தெரியவில்லை.

சீன அரசாங்கத்திற்கு, இந்த கொரோனா வைரஸ் பற்றி முன்கூட்டியே தெரிந்துள்ளது. இருப்பினும், அவர்கள் இதுபற்றி வெளியில் கூறவில்லை எனவும், உலகிடம் இருந்து பல உண்மைகளை சீன அரசாங்கம் மறைக்கின்றது எனவும், சீன மக்கள் கருதுகின்றனர்.

source:tfipost.com/2020/04/as-dr-ai-fen-goes-missing-chinese-citizens-play-hide-and-seek-with-communist-china-to-preserve-her-message/

HOT NEWS