கொரோனா ஆய்வாளர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!

06 May 2020 அரசியல்
bingliu.jpg

அமெரிக்காவில், கொரோனா வைரஸை ஆய்வு செய்து வந்த சீனாவினைச் சேர்ந்த ஆய்வாளர், சுட்டுக் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான பிட்ஸ்பெர்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர் டாக்டர். பிங்க் லியூ. 37 வயதான இவர், சீனாவினைச் சேர்ந்தவர். இவர், சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில், கணினித் துறையில் பிஎச்டி பட்டமும் பெற்றார். பின்னர், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பெர்க்கின் கார்னீச் மெலன் பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பினையும் பயின்றார்.

அவர் தற்பொழுது அமெரிக்காவின் யூபிஎம்சி ஆய்வகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். தன்னுடைய மனைவியுடன் பென்சில்வேனியாவில் உள்ள ரோஸ்டவுன்சிப் பகுதியில் வசித்து வந்தார். அவர், கொரோனா வைரஸ் ஆய்வில், பல முக்கியத் தகவல்களை கண்டுபிடித்துக் கொண்டு இருந்தார். இவர் ஏற்கனவே, பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம், உலகளவில் பிரபலமானவர்.

இவர் நேற்று இரவு, அவருடைய வீட்டில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவருடைய வீட்டின் கதவு திறந்தே இருந்துள்ளது. அவருடைய வீட்டில், அவருடைய மனைவி இல்லை. அப்பொழுது, அந்த வீட்டிற்குள் மர்ம நபர் நுழைந்துள்ளார். அவர், லீயூவினைப் பார்த்ததும் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியுள்ளார். இதனால், லீயூ சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரை சுட்ட அந்த மர்ம நபர், அங்கிருந்து தன்னுடையக் காரில் ஏறியுள்ளார். அங்கிருந்து 100 அடி வந்ததும், தன்னுடையக் காரிலேயே அமர்ந்த நிலையில், கையில் இருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து, ரோஸ்டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர்களின் முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட நபர் ஹோ குவூ எனவும், அவருக்கு 46 வயது எனவும் கண்டறிந்துள்ளனர். ஹோ குவூவும் பிங்க் லியூவும் ஒருவரை ஒருவர், நன்றாகத் தெரிந்தவர்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இது தற்பொழுது, சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS