வாலிபராஜா கதாநாயகன் சேதுராமன் மரணம்! சந்தானம் இரங்கல்!

27 March 2020 சினிமா
drsethuraman.jpg

திரைப்பட நடிகரும், மருத்துவருமான சேதுராமன், மாரடைப்பால் காலமானார்.

சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து கண்ணா லட்டுத்திண்ண ஆசையா படத்தில் அறிமுகமானவர் சேதுராமன். குறுகியக் காலத்திலேயே, வாலிப ராஜா, சக்கப் போடு போடு ராஜா, 50/50 உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.

அவருக்குத் திரையில் இருப்பவர்களுடன் நல்ல உறவு நிலை நீடித்து வந்தது. சருமம் மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக இவர் பிரபல மருத்துவமனையில் செயல்பட்டு வந்தார். அவருக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், அவர் நேற்று இரவு 8.45 மணியளவில் மரணமடைந்தார். இதற்கு திரைத்துறையினரும், சினிமா ரசிகர்களும் தங்களுடைய அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS