நடிகர் அஜித் குமாரின், மைத்துனர் நடித்துள்ள திரைப்படம் திரௌபதி. இந்தப் படத்தில் குறிப்பிட்ட இனக்குழுவினர் பற்றி அவதூறாக பேசியுள்ளதாக, இந்தப் படத்தினை வெளியிடக் கூடாது என, மத்திய தணிக்கைத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், படத்தினை வெளியிட வேண்டும் என்பதில், படக்குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், இந்தப் படத்தினை மீண்டும் மறு தணிக்கை செய்தனர்.
மறு தணிக்கைக்கு இந்தப் படமும் அனுப்பி வைக்கப்பட்டது. நடிகை கௌதமி உட்பட 5 பெண் உறுப்பினர்கள் என, மொத்தம் ஏழு பேர் இந்த திரௌபதி படத்தினைப் பார்த்தனர். அதில், அடக்குனா அடங்கக் கூடாது என, அண்ணன் சொல்லிருக்காப்ல என்ற வரிகள் உட்பட மொத்தம் 14 காட்சிகள் மியூட் செய்ப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒரு சில சண்டைக் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார், இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய இந்த திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு, யூஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தத் திரைப்படம் வருகின்ற 28ம் தேதி அன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில் 300 திரையறங்குகளில், இந்த திரைப்படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து பேசியுள்ள இப்படத்தின் இயக்குநர் ஜி மோகன், இந்தத் திரைப்படம் நாடகத்தனமான காதலை அடிப்படையாகக் கொண்டது எனவும், எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.