திரௌபதி திரைவிமர்சனம்!

01 March 2020 சினிமா
draupathi.jpg

பல நீண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, திரௌபதி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களின் செயல்களை, வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருவது போல இந்த படம் அமைந்துள்ளது என்றேக் கூறலாம். ஹெச். ராஜா, டாக்டர். ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இந்தப் படத்திற்கு, தங்களுடைய ஆதரவினையும், வரவேற்பினையும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்து வெளி வரும் கதாநாயகன், இரண்டு பேரைக் கொலை செய்கின்றான். அவனிடம், கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அப்பொழுது, நான் கொலை செய்யவில்லை என்றுக் கூறும் அவன், ஏன் சிறைக்குச் சென்றான் எனக் கூறுவதில் ஆரம்பிக்கின்றது படம். படம் முழுக்க, சாதியினால் ஏற்படும் உள்குத்து வேலைகள், பெண்கள் எவ்வாறு ஏமாறுகின்றனர், நாடகக் காதல் போன்றவற்றை வெளிப்படையாக காண்பித்துள்ளனர்.

படத்தில் பாடல்களை கொஞ்சம் வெறித்தனமாக வைத்திருந்தால், படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல ரீச்சாகி இருக்கும். ஏனெனில், பரபரப்பான படங்களுக்கு, வெறித்தனமான பாடல்கள் மிக முக்கியம். படத்தின் ஒரு சில இடங்களில், வெறுப்பு உண்டாகின்றது. இப்படியெல்லாம் செய்கின்றார்களா எனவும் யோசிக்கவும் வைக்கின்றது. பின்னணி இசை சுமார் ரகம். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தங்களுடையப் பணிகளை ஓரளவு நன்றாக செய்துள்ளனர் எனலாம். திருமாவளவன் பற்றி, சொல்லியும் சொல்லாமல் இருப்பது அனைவரையும் ஈர்த்துள்ளது எனலாம்.

படத்தில் லாஜிக்குகள் பார்க்காமல், ஒரு சுவாரஸ்யமான, புதுவிதமான சாதி பற்றிய படத்திற்கு சென்று ரசிக்கலாம் என்றால், இந்தப் படத்திற்கு செல்லலாம்.

மொத்தத்தில் திரௌபதி நெருப்புடா

ரேட்டிங் 2.5

HOT NEWS