டாஸ்மாக் திறக்கப்பட்டது! குடிமகன்கள் கொண்டாட்டம்!

07 May 2020 அரசியல்
tasmacfestival.jpg

குடிமகனே, பெரும் குடிமகனே என்று தமிழில் ஒரு பாடல் உள்ளது. அந்த அளவிற்கு, இன்று தமிழகத்தில் திருவிழா ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்.

கடந்த நாற்பது நாட்களாக ஊரடங்கு உத்தரவானது, தமிழகத்தில் அமலில் உள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்த ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் முடங்கின.

தமிழக அரசு நடத்தி வந்த டாஸ்மாக்கும் மூடப்பட்டது. இதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைக்காக பினாயில், மெத்தனால், சானிட்டைசர், ஷேவிங் லோசன் உள்ளிட்டவைகளை பொதுமக்களில் பலரும் பயன்படுத்தினர். இதனால், பலர் உயிரிழந்தனர். இதனை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று முதல் மதுபானக் கடைகளைத் திறக்க, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், நேற்று முதலே பலரும் டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று, வாழை மரம் கட்டுதல், தோரணம் கட்டுதல் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இன்று காலையில், சமூக இடைவெளியுடன் மதுவிற்பனை ஆரம்பமானது. காலையிலேயே ஆர்வமுடன் வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று, மதுவினை வாங்கிச் சென்றனர்.

HOT NEWS