இந்தியாவின் முதன் முறையாக, ஓட்டுநரே இல்லாமல் இயங்கக் கூடிய தானியங்கி மெட்ரோ ரயிலினை பாரதப் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக் கூடிய தானியங்கி மெட்ரோ ரயில் சேவையினை, டெல்லியில் இன்று துவங்கி வைத்தார் மோடி. இந்த ரயிலானது ஜனக்பூர் முதல் நொய்டா தாவரவியல் பூங்கா வரையிலும் இயக்கப்பட உள்ளது. இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, நான் ஆட்சிக்கு வரும்பொழுது 5 மெட்ரோ ரயில்கள் மட்டும் இயங்கி வந்ததாகவும், தற்பொழுது 18 ரயில்கள் இயங்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளார். 2025ம் ஆண்டுக்குள் 25 ரயில்கள் இயக்கப்படும் எனவும் பெருமிதமாகத் தெரிவித்து உள்ளார்.