மோடிக்காக வந்த டிரோன் தடுப்புக் கருவி! டிஆர்டிஓ தகவல்!

15 August 2020 அரசியல்
dronedeactivater.jpg

இன்று இந்திய அரசின் 74வது சுதந்திர நாளினை முன்னிட்டு, பாரதப் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியினை ஏற்றி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றார்.

அவர் பின்னர், புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அங்கு அவருக்கு உச்சக்கட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. எப்பொழுதும் இல்லாத வகையில், புதிய வகைப் பாதுகாப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பானது, இந்தியாவிற்கான பாதுகாப்பு கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றது.

அந்த அமைப்பால் உருவாக்கப்பட்ட கருவியானது, செங்கோட்டையில் பிரதமரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு இருப்பது, தற்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த கருவியானது, வானில் பறக்கும் டிரோன்களை செயலிழக்கச் செய்யும் சக்தி படைத்தது. இதனைப் பயன்படுத்தி, 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் எவ்வித டிரோனையும் எளிதாக செயலிழக்கச் செய்யலாம்.

இந்தக் கருவியானது லேசர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படக் கூடியது. மேலும், அந்த டிரோன்களின் தகவல்தொழில்நுட்பத்தினைத் துண்டிக்கும் ஆற்றல் படைத்தது. இந்தத் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 4000 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியாற்றினர். 300க்கும் மேற்பட்ட கேமிராக்களும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS