இந்திய அளவில் ராமதாஸ் டிரெண்டிங்! பாமக தலைவருக்குப் பிறந்தநாள்!

25 July 2019 அரசியல்
ramadoss.jpg

இன்று 80வது பிறந்தநாள் காணும் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, டிவிட்டரில், பாமகவினர் இந்திய அளவில் டிரெண்ட் செய்துவிட்டனர்.

அவருக்கு, தமிழகத்தின் முதல்வர், திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மருத்துவர் திரு ராமதாஸூக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கேரளா ஆளுநர் சதாசிவம், சரத்பவார் உள்ளிட்டப் பல தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பொங்கு தமிழ் மன்றம் மற்றும் மக்கள் டிவி ஆகியவைகளின் மூலம் விவசாயம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்க முடியும் என நம்பி, அவைகளை ஆரம்பித்து வைத்தவர் மருத்துவர் திரு. ராமதாஸ்.

பொதுவாழ்வில், பல முறை சிறை சென்றவர் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் சேர்த்துப் போராடியவர். வன்னிய சமூகத்தின் தலைவராகவும் அவர் தற்பொழுது இருக்கிறார். 108 ஆம்புலன்ஸ் சேவையை பற்றி, இவரே அதிக அளவில் பேசியவர். மது ஒழிப்பு, புகையிலைத் தடை ஆகியவற்றைத் தொடர்ந்து பேசும் தலைவராக மருத்துவர் இருக்கிறார்.

HOT NEWS