தற்காலிக அனுமதி அளித்த எலிசபெத் மகாராணி! அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர்!

14 January 2020 அரசியல்
princeharrymeghan.jpg

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேற, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அனுமதி அளித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது இளவரசரான ஹேரி மற்றும் மீஹன் ஃபாக்ஸ் ஆகியோர், இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்து, சற்று தள்ளி இருக்க ஆசைப்படுவதாகவும் கூறினர்.

இது மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவர்களுடைய விருப்பத்தினை, இங்கிலாந்து மகாராணி, இரண்டாம் எலிசபெத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின், பக்கிங்காம் அரண்மையில் இது குறித்து, மூத்த அரசியல்வாதிகளுடன், அரசியல் விமர்சகர்களுடனும் இவருடைய விருப்பம் பற்றி விவாதிக்கப்பட்டது.

பின்னர், மகாராணி எலிசபெத் சார்பில், பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, அறிக்கை வெளியானது. அதில், நானும் என்னுடைய குடும்பமும், இளவரசர் ஹேரி மற்றும் மீகனின் புதிய குடும்பத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்கள் தங்களுடைய சுதந்திரமான வாழ்க்கையை வாழ, விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அவர்கள் தற்காலிகமாக, கனடாவில் வாழ அனுமதி வழங்கப்படுகின்றது. என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மகாராணி இது குறித்து எவ்வித முடிவு எடுக்கப்படவில்லை எனவும், அரச குடும்பம் மட்டுமே இதுபற்றி முடிவு செய்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

HOT NEWS