செவ்வாய் வியாழனுக்கு இடையில் கடல் கிரகம்! கடலுக்குள் பல மர்மங்கள்!

16 August 2020 அமானுஷ்யம்
dwarfplanetss1.jpg

செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில், தற்பொழுது புதிதாக சிறிய கிரகம் ஒன்றினை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சீரஸ் (Ceres) என்றுப் பெயரிடப்பட்டு உள்ள இந்தக் கோளினை அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து உள்ளனர். இந்தக் கிரகத்தினைப் பற்றி ஏற்கனவே 1801ம் ஆண்டு இத்தாலியில் வாழ்ந்த மிகப் பெரிய கணித மேதையான, ஜியோசிப்பி பியாசி என்பவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தக் கிரகமானது, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் தனித்துவத்துடன் சுற்றி வருகின்றது. இந்தக் கிரகத்திற்கு, தனியாக ஈர்ப்பு சக்தி இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்தக் கிரகத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மையப் பகுதி இருப்பதாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் கிரகமானது, புவியினைப் போல சுழல்வதாகவும், இதன் தரைப்பரப்பில், கடல் நீர் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்தக் கிரகத்தின் தட்ப வெப்ப நிலையினைப் பார்க்கும் பொழுது, இங்கு உப்பு உள்ளிட்டவை இருக்கலாம் எனவும், இத்தனை நாட்கள் எப்படி மறைந்திருந்தது என ஆச்சர்யமாக வினவுகின்றனர். இது 35 கிலோமீட்டர் சுற்றளவுள்ளதாக இருக்கும் எனவும், கடலுக்கு அடியில் கிடைக்கும் கனிமங்கள் இங்கு இருக்கின்றன எனவும் கணித்துள்ளனர்.

இது பற்றிப் பேசும் விஞ்ஞானிகள், இது முற்றிலும் கடல் உலகமாக இருக்கலாம் எனவும், மனிதர்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்புகள் இருக்காது எனவும் கூறுகின்றனர். இந்தக் கடல் கிரகத்தில் மலைகள் மற்றும் குன்றுகள் போன்றவை, கடலுக்குள்ளேயே இருக்கலாம் எனவும் கணித்துள்ளனர்.

HOT NEWS