இ-சிகரெட் தடைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை! விரைவில் தடை அமலுக்கு வருகிறது!

19 September 2019 தொழில்நுட்பம்
e-cigarette.jpg

இந்திய கேபினட் அமைச்சரவை, இ-சிகரெட் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பதற்கான, அரசாணைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றிலும் தற்பொழுது, சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பது இந்த இ-சிகரெட். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, நுரையீரல் புற்றுநோய். இதனைப் பயன்படுத்தும் பலருக்கும், புற்றுநோய் உட்பட, பல நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன. தொடர்ந்து இதனைக் கவனித்த பிரேசில் உட்பட பல நாடுகள், இ-சிகரெட்டிக்கு தடைகளை விதிக்கத் தொடங்கின.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இ-சிகரெட் விற்பனை நம் நாட்டில், பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்பதனைக் கருத்தில் கொண்டு, நிர்மலா சீதாராமன் தலைமையிலான அமைச்சரவை அதற்கு தடைவிதிக்கும் ஆணைக்கு, ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தடை விரைவில் அமலுக்கு வர உள்ளது. இந்தத் தடைக்குப் பின், இனி யாரும், இந்த இ-சிகரெட்களை வாங்கவோ, விற்கவோ, உற்பத்தி செய்யவோ, பதுக்கவோ, பரிமாற்றம் செய்யவோ, பகிர்ந்தளிக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால், கடுமையான தண்டனைகள் அல்லது அபராதத்தை சந்திக்க நேரிடும்.

HOT NEWS