இந்தியாவில் விரைவில் ஈ சிகரெட் தடை செய்யப்பட உள்ளது. இதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் சிகரெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மன அழுத்தத்தினை சிகரெட் பிடித்தால், சரி செய்யலாம் என பலரும் நினைக்கின்றனர். இந்நிலையில், சிகரெட்டிற்கு மாற்றாக ஈ சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டது.
சார்ஜ் செய்து இயங்கும் சிகரெட், பேட்டரியில் இயங்கும் சிகரெட் என இது செயல்படுகிறது. இதற்கு புகையிலை தேவையில்லை. அதற்குப் பதிலாக, நிக்கோட்டின் திரவம் ஒரு குப்பியில் வழங்கப்படுகிறது. இதனை அந்த சிகரெட்டில் மாட்டி, புகைக்கும் பொழுது புகை வெளி வரும். புகைப்பிடித்தால் என்ன இன்பம் கிடைக்குமோ, அது இதில் முழுமையாக கிடைக்கும். வாயும் நாறாது. வெளிவிடும் புகையிலும் துர்நாற்றம் இருக்காது.
இவைகளால் புற்று நோய் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனை தற்பொழுது மேல்தட்டுப் பெண்களும் சகஜமாகப் பயன்படுத்துகின்றனர்.
மோடி அரசாங்கம் பதவியேற்று, மூன்று மாதங்கள் ஆக உள்ளது. இந்நிலையில், இரண்டாவது நூறு நாள் திட்டத்தினை மோடி அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பது, இந்த ஈ சிகரெட். இது குறித்து, டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் வழங்குத் தொடரப்பட்டு, இந்த தடைக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது மீண்டும் இந்த தடை அமலுக்கு வர உள்ளது. இந்தத் தடை அமலுக்கு வந்ததும், இதன் விற்பனை, வியாபாரம், விளம்பரம் ஆகியவைத் தடை செய்யப்படும்.
பிரேசில், நார்வே உட்பட மொத்தம் 25 நாடுகளில், இந்த ஈ சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையானது, விரைவில் இந்தியாவிலும் கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.