ஒவ்வொரு பிளாக்ஹோலும் ஒரு வாயில்! ஒரு பிரபஞ்சம் அதற்குள் உள்ளது!

11 September 2020 தொழில்நுட்பம்
blackholespace.jpg

ஒவ்வொரு பிளாக்ஹோலுக்கு உள்ளும் ஒரு பிரபஞ்சம் உள்ளது என, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகளவில் சமீப காலங்களில் பேசப்படும் பொருளாக, இந்த பிளாக் ஹோல் உள்ளது. விஞ்ஞானிகள் பலரும் பலவிதமாக இந்த பிளாக் ஹோல் குறித்துத் தங்களுடையக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த பிளாக் ஹோல் குறித்து சமீபத்தில், இந்தியானா பல்கலைக் கழகப் பேராசிரியர் நிக்கோடம் போப்லாஸ்கி தன்னுடைய ஆய்வறிக்கையினை வெளியிட்டு உள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றுப்படி, ஒவ்வொரு பிளாக்ஹோலுக்கு உள்ளும், ஒரு பிரபஞ்சம் இருக்க வேண்டும்.

இந்த பிளாக்ஹோலானது, அனைத்துப் பொருட்களையும் ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த பிளாக்ஹோல்கள், அனைத்து விண்வெளிப் பொருட்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் என எதையும் விட்டு வைக்காது. அனைத்தையும் உள்ளே இழுத்துவிடும். அவ்வாறு உள்ளே செல்லும் அனைத்தும், அந்த பிளாக்ஹோலின் அடுத்தப் பக்கத்தில் புதிய பிரபஞ்சமாக மாற்றமடைகின்றது.

ஒவ்வொரு பிளாக்ஹோலின் மற்றொரு பகுதியில், ஒயிட் ஹோல் இருக்க வேண்டும். அது புதிய பிரபஞ்சத்தின் வாயிலாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இந்த பிளாக்ஹோல்களுக்குள் செல்லும் பொருட்களுக்கு என்ன ஆகும் என, யாருக்கும் தெரியாது. ஒருவேளை வலிமையான காந்தப் புல சக்தியின் காரணமாக, எரிந்து போகலாம். அல்லது காலப் பயணம் நடைபெறலாம்.

அவ்வாறு நடைபெறாமல் வேறொரு பிரபஞ்சம் பிறக்க வாய்ப்பில்லை. இந்த பிளாக்ஹோலுக்குள் மனிதர்களோ அல்லது பெரிய விண்கலன்களோ செல்ல வாய்ப்பில்லை. அவ்வாறு செல்ல முயற்சித்தால், காந்தப் புல வலிமையால் முதலில் சுயநினைவு இழப்போம். பின்னர், உடலில் கொஞ்சம் கொஞ்சமாக தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். கடைசியில் சாம்பலாகி விடுவோம் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS