இந்தியாவை குறிவைக்கும் வணிக முதலைகள்

10 March 2019 தொழில்நுட்பம்
flipmart.jpg

உலகளவில் பிரசித்த பெற்ற நிறுவனங்களான அமேசான், வால்மார்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் தற்பொழுது, இந்தியாவில் பெரும் பணத்தை முதலீடு செய்ய உள்ளன.

இந்தியாவில் தற்பொழுது இணையதள வணிகத்தில் இருப்பது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்றைவைகளே. மற்ற நிறுவனங்களான, ஷினாப்டீல், ஜபங் போன்ற நிறுவனங்கள் சிறிய அளவிலேயே இயங்கி வருகின்றன. அதே சமயம், சீனாவில் மிகப் பெரிய வணிக சக்தியான அலிபாபா தற்பொழுது இந்தியாவில் வியாபாரம் செய்ய உள்ளது. அதே சமயம், பிளிப்கார்ட்ன் பெரும்பாலான பங்குகளை வாங்கியுள்ள வால்மார்ட் நிறுவனம், தற்பொழுது, நேரடியாகவே, களத்தில் குதிக்க உள்ளது.

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை, அதாவது 1,118 பில்லியன் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

வால்மார்ட் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தை பத்து வருடங்களுக்கு முன்பே, தன்னுடைய வியாபாரத்தை இந்தியாவில் தொடங்க இருந்தது, இருப்பினும், இந்தியாவில் ஏற்பட்ட கடும் போராட்டங்களால், தன்னுடைய வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தற்பொழுது, இந்தியாவே, இதனை ஊக்குவிப்பதால், இன்னும் சில மாதங்களில் தன்னுடைய வியாபாரத்தை தொடங்க உள்ளது.

அமேசான், நிறுவனம் தன்னுடைய வணிக தளமான அமேசான்.இன் தவிர்த்து, அமேசான் ப்ரைம் போன்றவற்றில் பெரும் தொகையை முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அலிபாபா நிறுவனம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டாலும், இன்னும் வியாபாரத்தில் இறங்கவில்லை. இதனை தற்பொழுது மாற்றி அமைக்க அதன் தலைவர் ஜாக் மா முடிவு செய்துள்ளார். இதனால், 2020க்குள் தன்னுடைய வியாபாரத்தை, இந்தியாவில் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார்.

இத்தகைய வணிக முதலைகளின் தாக்குதலை, எவ்வாறு இந்திய நிறுவனங்கள் தாங்கும் என்பது, கேள்விக்குறி மட்டுமின்றி, பெரிய சவாலும் கூட.

HOT NEWS