திங்களன்று (17-09-2019) நடைபெற்ற ஹேக்கர்களின் தாக்குதலால், தற்பொழுது ஈக்குவேடார் அரசாங்கமே, பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இருந்து, கிட்டத்தட்ட 17 மில்லியன் மக்களின் தகவல்கள், இணையத்தில் கசிந்துள்ளன. இதனை அந்நாட்டினைக் குறிவைத்து ஹேக்கர்கள் செய்துள்ளனர்.
விபிஎன்மென்டார் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வரும் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், நாங்கள் எங்கள் சர்வரில் நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தைக் கணக்கிடும் பொழுது, பொது மக்களின் பெயர், முகவரி, போன் நம்பர், தேசிய அடையாள அட்டையின் எண் உட்பட பல தகவல்கள் பரிமாறப்பட்டு இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
மேலும், ஜிடிநெட் என்ற இணைய தளம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு, முதன் முதலில் உண்மையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஹேக்கர்களின் தாக்குதலுக்கு, விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சேவின் ஹேக்கர்களே காரணம் எனக் கூறியுள்ளது.
ஈக்குவேடாரில் தஞ்சம் பெற அனுமதி கேட்டிருந்தார் அசாஞ்சே. ஆனால், அவரை அனுமதிக்கவில்லை ஈக்குவேடார். அடுத்து அவர் வேறு இடத்திற்கு முயற்சிக்கும் பொழுது, பிரிட்டிஷ் காவல் துறை அவரைக் கைது செய்தது. இதனையடுத்து, இதற்காக பலிவாங்கும் விதத்தில் இதனை அந்த ஹேக்கர்கள் செய்துள்ளனர் என அந்த இணைய தளம் கூறியுள்ளது.
www.ndtv.com/world-news/data-of-almost-whole-of-ecuadors-population-leaked-online-2102028