பணப்பரிமாற்றக் குற்றம்! தப்லிக்கி ஜமாத் தலைவர் மீது வழக்கு!

17 April 2020 அரசியல்
edtablighi.jpg

தப்லிக்கி ஜமாத் அமைப்பின் தலைவர், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தப்லிக்க ஜமாத் மர்காஸ் அமைப்பின் தலைவர் மௌலானா முகம்மத், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக இந்த மத அமைப்பினைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதனை முன்னிட்டு, மௌளலானா முகம்மத் மற்றும் அவருடன் சேர்த்து ஐந்து பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1800 வெளிநாட்டு உறுப்பினர்கள், தற்பொழுது நடைபெற்று முடிந்த ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 35% இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் சேர்த்து மொத்தமாக 26,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை சார்பில், ஒரு சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அவருடைய வங்கிக் கணக்குகள், ஜமாத்தின் வங்கிக் கணக்குகள், பணப்பரிமாற்றங்கள் போன்றவை தற்பொழுது சோதனை செய்யப்பட்டு வருகின்றது. பணத்தினை பரிமாற்றம் செய்தவர்களையும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS