டாக்டர் எடப்பாடி பழனிசாமி! கௌரவ பட்டம் பெற்றார்!

21 October 2019 அரசியல்
edappadidoctorate.jpg

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது டாக்டர். எம்ஜிஆர் எஜூகேசுனல் அண்ட் இன்ஸ்ட்டிடியூட்.

இதனால், இனி டாக்டர் எடப்பாடி பழனிசாமி என்ற அவர் அழைக்கப்பட வேண்டும். இது குறித்து, மாணவர்கள் முன் உரையாற்றிய முதல்வர், தற்பொழுது கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, என்னுடைய பொறுப்பும் அதிகரித்துள்ளது.

படிக்கின்ற மாணவர்கள், நன்றாக படிக்க வேண்டும் மேலும், வாழ்க்கைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.

மேலும் அவர் பேசுகையில், பட்டமளிப்பு விழா என்ற இந்த அருமையான நிகழ்வில் பங்கேற்பது தனிச் சிறப்பு. மாணவா்களாகிய உங்களுக்கு காத்திருக்கும் பெருமை வாய்ந்த பொறுப்புகளை, நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தருணம் இதுவாகும். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான, உங்களது பொறுப்புகளை நிறைவேற்ற, உறுதி எடுத்துக் கொள்ளும் தருணமும் இதுதான். நானும் கௌரவ டாக்டா் பட்டம் பெற்றதன் மூலம், எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன.

ஒரு சமூகத்தின் வளா்ச்சி, பொருளாதார பரிணாம வளா்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகைச் செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானது தான். அதே நேரம், வாழ்க்கையை கற்கவும் மனிதனின் அகம் மேன்மையடையவும் இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இவை இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்." என்றார்.

நம்முடைய தமிழக அரசு, தற்பொழுது மத்திய அரசிடம், புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பதனை வலியுறுத்தி உள்ளது. அதற்கு நல்ல பதில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

HOT NEWS