நியூயார்க்கில் முதல்வர்! பண்ணைகளை ஆய்வு செய்தார்!

02 September 2019 அரசியல்
epsforeign.jpg

தமிழக முதல்வர். திரு. பழனிசாமி அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். முதலில் லண்டன் சென்ற அவருக்கு அங்கு வாழும் தமிழர்கள் சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள நிறுவனங்களை ஆய்வு செய்த முதல்வர், அங்கு நடைபெற்ற ஒப்பந்தங்களின் கையெழுத்தினைப் பார்வை செய்தார். பின், அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிற்கு சென்ற முதல்வர், அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து, நியூயார்க் வாழ் தமிழர்கள் மரியாதை செய்தனர்.

அவர்களுடைய மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர், பின் அங்கிருந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் தற்பொழுது, அங்குள்ள பப்பல்லோ என்ற நகரில் அமைந்திருக்கும், மிகப் பெரிய கால்நடைப் பகுதிக்குச் சென்றார். அங்கு வளர்க்கப்படும் மாடுகளையும், மாடுகள் வளர்க்கப்படும் விதத்தினையும் ஆய்வு செய்தார்.

அங்கு வளர்க்கப்படும் மாடுகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அவைகளுக்கு எவ்வித வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இதனை சேலம் மாவட்டதில் அமைய உள்ள சர்வதேச தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில், கொண்டு வருவதற்கான அமைப்புகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியின் பொழுது, தமிழக அமைச்சர்கள் எம்சி சம்பத், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்பி. உதய குமார், உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு அங்குள்ள, தனியார் விடுதியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூடத்தில், முதல்வர் பங்கேற்கிறார்.

HOT NEWS