உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம், அரசாங்கங்கள் உங்களை உளவு பார்க்கின்றனர் என, அமெரிக்காவில் இருந்து தப்பித்த எட்வர்ட் ஸ்நோடன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் என்எஸ்ஏ தரப்பால், தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஸ்நோடன், அமெரிக்காவின் பல இரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், நேற்று காலை ரஷ்யாவில், எம்எஸ்என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அவர், உலகில் உள்ள அனைத்து அரசாங்கமுமே, தங்களுடைய மக்களை உளவு பார்க்கின்றன எனக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், உங்கள் கையில் உள்ள ஸ்மார்ட் போன்கள் மூலம், உங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும், நீங்கள் தான் தாராளமாகத் தருகின்றீர்கள். அதன் மூலம் அவர்கள், உங்களுடைய, கடந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றை பல நிறுவனங்களுக்கு விற்கின்றனர். உங்களுடைய ஹிஸ்டரி (வரலாறு) மூலம், உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இயலும்.
ஒவ்வொரு ஸ்மார்ட் போனும், தனிமனிதப் பாதுகாப்பை அளித்து வருகின்றது. இணையக் குற்றவாளிகளைப் போலவே, அரசாங்கமும் உங்களை உளவு பார்க்கின்றது. உங்களைப் பற்றித் திரட்டப்படும் தகவல்கள் அனைத்துமே, அரசாங்கத்தாலும், பல பெரிய நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. அதனைப் பயன்படுத்தி, அவர்களால் எதுவும் செய்ய இயலும்.
நீங்கள் அமெரிக்க அதிபரைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு, டொனால்ட் ட்ரம்பை மக்களுக்கு பிடிக்கும் என நினைத்தேன், ஆனால், அது பல தீய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
இவரே, இதற்க முன்னர், யூடியூப், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், நம்மை உளவு பார்க்கின்றனர் எனக் கூறியிருந்தார்.
www.nbcnews.com/msnbc/news/edward-snowden-says-government-your-phone-insists-he-only-wanted-n1055171?cid=sm_npd_nn_tw_ma