பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை மக்களை உளவு பார்க்கின்றன! பிரபல ஹேக்கர் பரபரப்புத் தகவல்!

04 August 2019 உடல்நலம்
edsnowden.jpg

எட்வர்ட் ஸ்நோடனைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இவர் உலகம் முழுக்கப் பிரபலமான ஹேக்கர். அமெரிக்கா உலகில் உள்ள பெரிய இணையதளங்களையும், மக்களையும் கண்காணிப்பதாக, 2013ம் ஆண்டு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டவர் தான் இந்த ஸ்நோடன். அன்று முதல் இன்று வரை, இவரை அமெரிக்கா தனிப் படையை வைத்து, தேடி வருகிறது.

மனிதர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என, யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடையக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

அவர் தற்பொழுது போட்டுள்ள குண்டு தான் சமூக வலைதளம். ஆம், உலகில் உள்ள மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக், இண்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவை, தன்னுடையப் பயனர்களின் செயல்களை கண்காணிப்பதாக கூறியுள்ளார். மேலும், இவைகளின் மூலம் பல நிறுவனங்கள் பொது மக்களை வேவுப் பார்ப்பதாகவும் கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

HOT NEWS