கிணற்றில் விழுந்த யானை மீட்பு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

25 October 2019 அரசியல்
elephantwell.jpg

ஒடிசாவில் கிணற்றில் விழுந்த யானையினை, அப்பகுதியில் உள்ள மக்களின் உதவியுடன் மீட்புத் துறையினர் மீட்டனர்.

ஒடிசா மாநிலம், சுந்தர்கர் என்ற மாவட்டத்தில், மழை பெய்த காரணத்தினல், தரையோடு தரையாக இருந்த கிணறு நிரம்பியிருந்தது. இதனைப் பார்த்த யானை அங்கு தண்ணீர் குடிக்க வந்து விழுந்துவிட்டது. அதனல் பிளிறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அதிர்ச்சியுடன் ஓடி வந்தனர்.

அப்பொழுது, யானை அந்த கிணற்றில் மாட்டிக் கொண்டு உள்ளதை அறிந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்நிலையில், அவர்களுடன் சேர்ந்து, பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வரும் முன்னர், தலைகீழாக கிடந்த யானையை கயிறு உட்படப் பல பொருட்களை வைத்து, இழுத்தனர். அதனால், யானை நேராக வந்தது.

இருப்பினும், அதனைத் தூக்கும் வசதி இல்லாததால் அனைவரும் நான்கு திசைகளிலும் வரிசையில் நின்று, அந்த யானையின் காலை வெயில் கொண்டு வர முயற்சி செய்தனர். அதன் தும்பிக்கை முதலில் வெளியில் வந்தது. பின்னர், அதன் கால்கள் வெளியே வந்ததும் தானாக கால்களை ஊண்றி வெளியே வந்தது. வெளியே வந்த யானை, வேகமாக காட்டுப் பகுதிக்குள ஓட ஆரம்பித்தது. அதனைக் கண்ட மக்கள், யானையிடம் இருந்து, வேகமாக தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடினர்.

HOT NEWS