நீண்ட நாட்களுக்குப் பின் எலிசபெத் ராணி! அதிர்ந்த இங்கிலாந்து!

15 October 2019 அரசியல்
queenelizabeth2.jpg

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டின் ராணியான எலிசபெத்-2, இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அவர் நாடாளுமன்றத்திற்கு செல்வதையொட்டி, சாலையோரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. பாரம்பரிய முறைப்படி, குதிரை வண்டியில், இங்கிலாந்து நாட்டின் வீதிகளில் வலம் வந்த ராணி, பாதுகாப்புப் படையின் கொடுத்த மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், அவர் அமர்வதற்கு, தங்கத்தால் ஆன நற்காலி உட்பட அனைத்து வசதிகளும் பிரம்மாண்டமாக, ஏற்பாடு செய்ப்பட்டு இருந்தது. அதில் அவர் அமர்ந்தார். இங்கிலாந்து நாட்டின் பிரதமர் உட்பட அனைவருமே, எலிசபெத் ராணிக்கு வலது மற்றும் இடது புறத்தில், கீழே அமைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தனர்.

அவர்கள் முன்னிலையில் பேசிய, மகாராணி வரும் 31ம் தேதிக்குள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, நாடாளமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும், அதற்காக அரசாங்கம் முதன்மை வழங்கும் எனக் கூறினார்.

HOT NEWS