ரஷ்யாவின் எச்சரிக்கை! கண்டுகொள்ளாத இங்கிலாந்து! உக்ரைனில் போர் பயிற்சி!

20 September 2020 அரசியல்
parachutist-exercise.jpg

ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாமல், உக்ரைன் நாட்டில் இங்கிலாந்து நாட்டில் போர் பயிற்சி செய்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்றது. கிருமியா நாட்டினை ரஷ்யாவுடன் இணைத்ததன் காரணமாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் ஒருவருடன் ஒருவர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது இங்கிலாந்து இராணுவம், உக்ரைன் நாட்டில் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அரசு, அவ்வாறு இராணுவப் பயிற்சி எதையும் உக்ரைன் நாட்டில் செய்யக் கூடாது என வற்புறுத்தியது. ஆனால், அதனைக் கொஞ்சம் கூடக் கண்டு கொள்ளாத இங்கிலாந்து அரசு, உக்ரைன் நாட்டு இராணுவத்துடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. சி 130 ஹெர்குலஸ் போர் விமானத்தில் இருந்து, சுமார் 250 பாராசூட் வீரர்கள் 600 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து குதித்து, பயிற்சியில் ஈடுபட்டனர். இது தற்பொழுது ரஷ்ய பிராந்தியத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS