இங்கிலாந்தில் அமெரிக்காவின் பைசர் மருந்துக்கு அனுமதி! கொரோனாவில் இருந்து விடுதலை!

02 December 2020 அரசியல்
pfizervaccine.jpg

இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது விடுதலை அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் ஆறேகால் கோடிக்கும் அதிகமானோரிடம் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, தற்பொழுது அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் புதிய தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்து உள்ளன. இதற்கு அனுமதி கேட்டு அமெரிக்காவிடமும் விண்ணப்பித்து உள்ளன. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தானது 90% வெற்றியினையும், மாடர்னா மருந்து 92% வெற்றியினையும் பதிவு செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் திடீரென்று கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், தற்பொழுது மீண்டும் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்தானது, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிட்டு வருவதால், அதன் மீதான நம்பிக்கையானது உலகளவில் பொய்த்துவிட்டது. எனவே, வேறொரு மருந்தினை கட்டாயம் தேட வேண்டிய சூழலில் உலக நாடுகள் உள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் எம்ஹெச்ஆர்ஏ என்ற அமைப்பானது, அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மருந்திற்கு, தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அதன் செயலாளர் கூறுகையில், இந்த மருந்தின் சோதனைப் பற்றிய முடிவுகள் மிகத் தெளிவாகவும், சரியாகவும் இருக்கின்ற காரணத்தாலும், வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதாலும் இந்த மருந்தினை நாங்கள் அனுமதிக்கின்றோம்.

இந்த மருந்தானது, மீண்டும் ஒரு முறை அவசரக் கட்ட தரச் சான்றிதழ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் முதல், இங்கிலாந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த மருந்தானது கிடைக்கும் எனத் தெரிவித்து உள்ளார். இதனால், கிறிஸ்துமஸ் நாளிற்கு முன்பே, இந்த கொரோனா தடுப்பூசியானது பயன்பாட்டிற்கு வரும் என்றுக் கணிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS