இங்கிலாந்து கொரோனா மருந்தால் பிரச்சனை! மனிதர்கள் மீதான சோதனை நிறுத்தம்!

09 September 2020 அரசியல்
vaccination1.jpg

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன.

இரண்டே முக்கால் கோடிக்கும் அதிகமானோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்பொழுது இந்த வைரஸினை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் முன்னணி நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரோஜெனிக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்து கொரோனா வைரஸ் தடுப்பூசியானது, தற்பொழுது இறுதிக் கட்ட ஆய்வில் உள்ளது.

அந்த ஆய்வில் தற்பொழுது சிறு தொய்வு ஏற்பட்டு உள்ளது. இந்த மருந்தினைப் பயன்படுத்திய ஒருவருக்கு, உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்த சோதனையினை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இது சாதாரண விஷயம் எனவும், சில சமயம் இவ்வாறு நடைபெறுவது இயற்கையான ஒன்று எனவும், இதனால் பெரிய பிரச்சனைகள் ஏற்படாது எனவும் அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பாதிப்புக்குள்ளா நபர் குறித்தோ அல்லது எவ்விதமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்தோ, ஆஸ்ட்ரோஜெனிக்கா கூறவில்லை. இதனால், மருந்து வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS