இங்கிலாந்தில் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து, 3 கட்ட ஊரடங்கினை பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
இங்கிலாந்தில் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸானது, தற்பொழுது அந்நாட்டின் வடக்குப் பகுதிகளில் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் வயதான முதியவர்களிடம் அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் நேற்று ஊரடங்கு உத்தரவினை அறிவித்தார்.
அதன்படி, அனைத்துக் கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டுகோள் விடுத்து உள்ளார். இறுதிச் சடங்களுக்கு 15 பேர் செல்லலாம் எனவும், இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில 30 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதே போல், திருமண நிகழ்ச்சிகளில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கி உள்ளார். 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த விதிகள் அனைத்தும் மறுபரீசிலனை செய்யப்படும்.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகளில், ஏற்கனவை பின்பற்றப்படுகின்ற விதிமுறைகள் தொடரும். இரவு 10 மணிகளுக்கு மேல், கேளிக்கை விடுதிகள், பார்கள், மற்றும் ஹோட்டல்களை திறந்து வைத்திருக்க கூடாது. கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில், ஏற்கனவே பின்பற்றப்படுகின்ற விதிகளே அமல்படுத்தப்பட்டு உள்ளன.
தீவிரத் தொற்று காணப்படும் இடங்களில், விருந்தினர்களை அழைக்கவோ அல்லது தங்க வைக்கவோ அனுமதி கிடையாது. அத்துடன், மேற்கூரிய விதிகளும் பொருந்தும் என போரீஸ் ஜான்சன் கூறியுள்ளார்.