இங்கிலாந்து பிரதமர் கொரோனாவில் இருந்து எஸ்கேப்! வீடு திரும்பினார்!

13 April 2020 அரசியல்
borisjohnsonicu.jpg

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன், சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக பலத் தலைவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இங்கிலாந்து பிரதமரும் அடங்குவார்.

கடந்த மார்ச் 29ம் தேதி அன்று, தான் கொனோரா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அவருடைய உடல்நிலையானது தொடர்ந்து 10 நாட்களாக, மோசமாகிக் கொண்டே வந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர், அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு, செயற்கை சுவாசக் கருவிகள் மூலம், சுவாசக்காற்று வழங்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு வென்டிலேட்டர் பயன்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், அவர் குணமடைந்து வருவதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரை நார்மல் வார்டிற்கு மாற்றினர். அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். தற்பொழுது அவர் பூரண குணமடைந்து விட்டதால் வீடு திரும்பியுள்ளார். தனது வாழ்க்கையினை மீட்டுத் தந்த மருத்துவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளதாக, மிகுந்த உணர்ச்சியுடன் போரீஸ் பேசியுள்ளார்.

HOT NEWS